Please follow and like us:

பாராளுமன்றத்தில் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து அதிமுக எம்பி க்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ”ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை இதை செயல்படுத்துவதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பெட்ரோலிய துறை அமைச்சர் கூறுகையில்:

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் அந்த ஊர் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள், எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன, இது போன்ற எரிவாயு திட்டங்கள் ஏற்கனவே நாட்டில் உள்ளது அந்த அடிப்படையில் தான் ஹைட்ரோ கார்பன் திட்டமும் நடைமுறைப் படுத்தப்படுகின்றது.

வரும் காலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் தேவை அதிகமாகும், எனவே அதில் தண்ணிரை அடைய இது போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.

பெட்ரோலிய துறை அமைச்சர் மற்றும் பிரதமர் மோடி

இந்தியாவிலேயே எரிவாயுவை எடுப்பதற்காக அனைத்து திட்டங்களையும் பிரதமர் மோடி எடுத்து வருகின்றார்.

இது குறித்து பேச நாளை கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்

எனத் தெரிவித்துள்ளார்.

27 total views, 1 views today

Please follow and like us:

Related Post