Please follow and like us:

ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா காரை அதிவேகமாக ஓட்டி வந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியுள்ளார். இதில் ஆட்டோவில் உறங்கிக் கொண்டிருந்த ட்ரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அதிகாலை 4.15 மணி அளவில் ஆழ்வார்பேட்டை டிடிகே ரோட்டில் அதிகவேமாக கார் ஓட்டி வந்த சவுந்தர்யா சாலையோரம் நின்ற ஆட்டோ மீது மோதியுள்ளார். இதில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டது. ட்ரைவர் படுகாயமடைந்தார்.

இதை பார்த்தவர்கள் ட்ரைவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சவுந்தர்யா தரப்பில் பாதிப்பிற்குண்டான பணத்தை தருவதாக கூறியுள்ளனர். இதை தொடர்ந்து ட்ரைவர் புகார் ஏதும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

25 total views, 1 views today

Please follow and like us:

Related Post