Please follow and like us:

மதுரையில் நடக்கும் கிரானைடு முறைகேடுகள் குறித்து விசாரனை நடத்த சகயாம் அவர்களை நியமித்து கடந்த 2014 ஆம் ஆண்டு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

சகாயம் அவர்கள் ஆய்வு செய்து தனது அறிக்கையை 2015 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விசயங்கள் குறித்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை இந்நிலையில், Frontline என்ற ஆங்கில பத்திரிக்கை சகாயம் அவர்களின் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளது.

அது மிகவும் அதிர்ச்சியூட்டும் வண்ணம் உள்ளது, ஒரு அரசே சேர்ந்து தமிழகத்தின் கனிமவளத்தை சூரையாடி ஒரு தனிப்பட்ட நிறுவனம் கோடி கோடியாய் கொள்ளை அடிக்க உடந்தையாக இருந்ததை அறிக்கை அம்பலபடுத்தியுள்ளது.

இதனால் தான் இந்த அறிக்கையை தமிழக அரசு ஏற்க மருத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது

சகயாம் அவர்களின் துணிச்சலான அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்.

கிரானைடு முறைகேட்டில் அரசிற்கு 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு

போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு ஒரே பதிவுஎண் கொண்ட பல லாரிகள் இயக்கப்பட்டுள்ளது.

கிரானைட் மதிப்பை குறைத்துக்காட்டி அந்நிய செலாவணி மோசடி

சுங்கத்துரை, தமிழநாடு கனிமவள நிறுவனங்கள் மற்றும் அரசுகள் அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

கிரானைடு குவாரிகளில் நரபலி நடத்தப்பட்டிருப்பது உறுதி. காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

விசாரனை நடத்த விஜயேந்திரபிடாரி தலைமையிலான காவல்துறை ஒத்துழைப்பு தர மறுத்து விட்டது.

அரசு அதிகாரிகளின் உடந்தையுடன் நீர் நிலைகள் மக்களின் வாழ்விடங்கள் முறைகேடா கிரானைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

20 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பொதுமக்களிடமிருந்து முறைகேடாக PRP நிறுவனம் பறித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்தும் PRP க்கு சாதகமாக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசு நிலங்களில் தனியார் நிறுவனங்கள் கிரானைடு வெட்டுவதற்கு தமிழ்நாடு கனிமவள நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் அரசிற்கு 5 ஆயிரம் கோடி இழப்பு

அரசு நிர்வாகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த மோசடிகள் நடந்திருக்க முடியாது

நேர்மையான அதிகாரிகளை மதுரை மாவட்டத்தில் பணி அமர்த்த வேண்டும்.

தனியார் நிறுவனம் கொடுத்த லஞ்சத்திற்காக இந்த நாட்டையே விற்றுள்ளது இந்த அரசு துறை என்பதை சகயாம் அறிக்கை துணிச்சலாக சுட்டிக்காட்டியுள்ளது.

25 total views, 1 views today

Please follow and like us:

Related Post