Please follow and like us:

கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் வர்தா புயலின் போது 100 க்கும் மேற்பட்ட மரங்கள் கீழே விழுந்துள்ளன.
இவைகள் விலை உயர்ந்த மரங்கள் என்பதால் இதன் விலை 1.5 கோடியாகும்.

இதை வெட்டி விற்க திட்டமிட்ட அதிகாரிகள், வெறும் ஒரு லட்சத்திற்கு யாருக்கோ இதை டெண்டர் விடாமல் கைமாற்றியுள்ளனர். இதை தொடர்ந்து மரங்களை அகற்றும் பணிகள் நடந்துள்ளது.  இந்நிலையில் இது குறித்து பொதுப் பணித் துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த பணிகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு இது நாள் வரையும் அந்த மரங்கள் அங்கேயே விழுந்து கிடக்கின்றனர்.

எனக்கு இல்லன்னா யாருக்கும் இல்லை என்ற அடிப்படையில் கேட்பாரற்று விடப்பட்டுள்ளது இந்த பணி!


இதனால் வெயில் காலமாக இருப்பதால் அங்கு தீ விபத்துக்கள் ஏற்படலாம் என அங்குள்ளவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

18 total views, 1 views today

Please follow and like us:

Related Post