Please follow and like us:

இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை ஸ்கார்ட்லாண்ட் யார்ட் போலிசார் லண்டனில் கைது செய்துள்ளனர். அவரை இன்று அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர்.

பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு அதை கட்டாமல் வெளிநாட்டில் பதுங்கி வருகின்றார் விஜய்மல்லையா. விவசாயிகளின் கடனிற்கு கிடுக்கிப்பிடி போடும் வங்கிகள் விஜய் மல்லையாவை விட்டு விட்டதே என தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த வருகின்றது.

இந்த நிலையில் லண்டனில விஜய் மல்லையா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேரி மல்லையாவை ஒப்படைக்குமாறு இந்தியா பிரிட்ஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தது.

இந்த கோரிக்கையை ஏற்று இவரை இந்தியாவிற்கு அனுப்புவதாக வேண்டாமா என்ற சட்ட ரீதியான நடைமுறைகளில் தற்போது பிரிட்டிஷ் அரசாங்கம் இறங்கியுள்ளது. அதன் முதல் கட்டமாக அவரை இன்று கோர்ட் முன் ஆஜர்படுத்த லண்டன் போலிசார் கைது செய்துள்ளனர்.

நீதிபதி விசாரித்து என்ன செய்யலாம் என்பதை முடிவு செய்வார். இந்த நிலையில் மல்லையா பெயில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் இன்று வெளியே வந்து விடக் கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Update : 5.30 விஜய் மல்லையாவிற்கு பெயில ்வழங்கப்பட்டு வெளியேவந்தார்.

26 total views, 1 views today

Please follow and like us:

Related Post