Please follow and like us:

பாம்பு கடித்த நிலையில் தனது கணவரின் உயிரை காப்பாற்ற மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ஓடி வந்துள்ளார் பழங்குடி இனத்தை சேர்ந்த பெண், மருத்துவர்கள் அலட்சியமாக ஒரு சில மருந்துகளை எழுதி கொடுத்து வெளியில் தனியார் மெடிகல்லில் வாங்கி வரச் சொல்லியுள்ளனர்.

போதிய பணம் இல்லாத காரணத்தினால் மனைவியால் மருந்தை வாங்க முடியவில்லை, இதனால் கணவர் இறந்து விடுகின்றார்.

”உடலை எடுத்துக் கொண்டு போ” என மருத்துவர்கள் கூறியுள்ளனர், ”அய்யா ஆம்புலன்ஸ் க்கு ஏற்பாடு செய்து தாருங்கள்” எனக் கேட்டதற்கு தனியார் ”ஆம்புலன்ஸ் க்கு 4 ஆயிரம் ஆகும் , 4 ஆயிரம் கொடு” எனக் கெட்டுள்ளது அரசு மருத்துவமனை!

”மருந்து வாங்குவதற்கே பணம் இல்லையே 4 ஆயிரம் எப்படி அய்யா இருக்கும்” என மன்றாடியும் மருத்துவர்களின் மனம் இறங்கவில்லை.

வேறு வழியின்றி கணவரின் உடலை கணவரின் தம்பியின் உதவியோடு தூக்கி சென்றுள்ளார் மனைவி!

இதில் நெஞ்சை பிளக்கும் விதமாக தனது கைக்குழந்தையை தனது முதுகில் தூக்கிக் கொண்டு தனது கணவரின் சடலத்தை அந்த பெண் கையில் தூக்கி சென்றது பார்ப்பவர்களை கண்கலங்கச் செய்கின்றது.

மனைவி சீத்தா தேவி மற்றும் இறந்த கணவர் ராஜேந்திரன் சென்றது ஜார்க்ண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள மருத்துவனைக்கு!

நீண்ட தூரம் தூக்கி சென்ற பிறகு அங்குள்ள பொதுமக்கள் பார்த்த பின்னர் அவர்களுக்கு வாகன ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளனர்.

[embedded content]

18 total views, 1 views today

Please follow and like us:

Related Post