Please follow and like us:

கிருஷ்ணகிரி மாவட்டம் லக்கம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் இன்று காலை துவங்க 10 மணிக்கு துவங்க வேண்டிய அரசு தேர்வை 4 ஆசிரியர்கள் சேர்ந்து முன் கூட்டியே 9 மணிக்கெல்லாம் துவங்கி மாணவர்கள் பரிட்சை எழுத உத்தரவிட்டுள்ளனர்.

இதில் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர், இதை அந்த பள்ளியில் ஆசிரியராக பணியுரியும் உதயசிவசங்கரி என்ற பெண் ஆசிரியர் தட்டிக் கேட்டுள்ளார், இதற்காக பெண் என்றும் பாராமல் மாணவர்கள் முன்னிலையிலேயே அவரை அந்த ஆண் ஆசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

இது குறித்து மாணவர்கள் உடனடியாக தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர், இதை கேள்விபட்டு திரண்டு வந்த பெற்றோர்கள் தட்டிக்கேட்ட பெண் ஆசிரியருக்கு நியாயம் கேட்டு பள்ளிக் கூடத்தில் உள்ளிறுப்பு போராட்டம் நடத்தினர்.

தாக்கிய ஆசிரியர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும், தலைமை ஆசிரியரும் இதற்கு உடந்தை என என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

[embedded content]

31 total views, 1 views today

Please follow and like us:

Related Post