Please follow and like us:

குடித்து விட்டு மனைவியை வெட்டிக் கொன்று தடுக்க வந்த தனது அண்ணனையும் வெட்டியுள்ளார் திருவண்ணாமலையை சேர்ந்த ஜஸ்டின் கென்னடி.

ஆரணி அடுத்த இலுப்ப குணம் கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் கென்னடி இவரது மனைவி சுமதி. இருவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

கென்னடி வெளி ஊர்களுக்கு சென்று வேலை பார்ப்பவர். அடிக்கடி வீட்டிற்கு வந்து போவார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. குழந்தை எனக்கு பிறக்கவில்லை என கணவர் சந்தேகப்பட்டுள்ளார்.

நேற்று இரவு குடித்து விட்டு வந்த கென்னடி மனைவியுடன் தகாராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து மனைவியை அரவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். சத்தம் கேட்டு தடுக்க வந்த அண்ணனையும் வெட்டியுள்ளார்.

இந்த சண்டையில் பிஞ்சு குழந்தைக்கும் வெட்டுடி விழுந்துள்ளது.

இதில் மனைவி சுமதி உயிரிழந்தார், அண்ணன் படுகாமமுற்றார்.

அக்கம் பக்கத்தினர் போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். போலிசார் வந்து கென்னடியை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

25 total views, 1 views today

Please follow and like us:

Related Post