Please follow and like us:

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மதுரை மாவட்டம் அழகர்கோவில் சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் பார் இயங்கி வந்துள்ளது. அருகில் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மாணவர்கள் மற்றும் பெண்கள் அதிகம் வந்து செல்லும் இடங்கள் உள்ளது. இதனால் பெண்கள் அந்த வழியாக வருவதற்கு பயந்து சுற்றி வருவதை வழக்கமாக கொண்டு வந்துள்ளனர். இந்த டாஸ்மாக்கை அகற்றும் படி கலெக்டருக்கு பல முறை மனு கொடுத்துள்ளனர்.

கலெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அந்த ஊர் மாணவர்களே களத்தில் இறங்கி அந்த டாஸ்மாக் கடை மற்றும் பாரை அடித்து நொறுக்கினர். போலிசாருக்கு இந்த தகவல் தெரியாததால் கடையை முழுவதுமாக மாணவர்கள் அடித்து நொறுக்கினர்.

மாணவர்களை அந்த பார் உரிமையாளரான கரைவேட்டிக்காரர் மிரட்டி தடுக்க முற்பட்டார், இருந்த போதிலும் மாணவர்கள் அவரையும் அடித்து விட்டி கடையை துவம்சம் செய்தனர்.

தற்போது அழகர்கோவில் சாலையில் அமர்ந்து மாணவர்கள் மற்றும் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

23 total views, 1 views today

Please follow and like us:

Related Post