Please follow and like us:

மதுரை மேலூரை சேர்ந்த ரமேஷ் என்பரை விசாரனைக்கு அழைத்து சென்ற போலிசார் கோடூரமாக சித்ரவதை செய்ததில் அவர் மரணமடைந்து விட்டதாக ரமேஷின் மனைவி உயர் நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ,

தவறு செய்த போலிஸ் அதிகாரிகள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன் ? ரமேஷின் குடும்பத்திற்கு 10 லட்சம் தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் 6 வாரத்திற்குள் இதை ரமேஷின் குடும்பத்தாரிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். தவறு செய்த போலிஸ் அதிகாரியிடமிருந்து இந்த பணத்தை வசூல் செய்ய வேண்டும்.

அடித்து சித்ரவதை செய்ததால் தான் ரமேஷ் மரணித்தார் என சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆனால் போலிஸ் தரப்பில் இயற்கையாக மரணித்துள்ளார் என வழக்கை முடித்துள்ளீர்கள். போலிஸ் அதிகாரிகள் தவறு செய்யவில்லை என தமிழக அரசு வாதிடுகின்றது.

சிபிசிஐடி அறிக்கை டிஜிபிக்கு அனுப்பப்பட்டும் ரமேஷின் மரணத்திறகு காரணமாக இருந்த மேலூர் டிஎஸ்பி விஜயபாஸ்கரன், இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் அரசு இதுவரை எடுக்கவில்லை

என தமிழக அரசையும் போலிசையும் கண்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

29 total views, 1 views today

Please follow and like us:

Related Post