Please follow and like us:

பெப்சி விற்பனை தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ள நிலையில், அதன் விற்பனையை மீட்க பெப்சி புதிய யுக்தியை கையாண்டுள்ளது. பெப்சி பாட்டிலில் பெப்சி என்ற அடையாளமே தெரியாத வண்ணம் பாட்டிலை வடிவமைத்து பெயரையும் மாற்றி விற்பனை செய்து வருகின்றது. யாருக்கும் தெரியாத வண்ணம் எங்கோ ஒரு ஓரத்தில் தனது பெயரை குறிப்பிட்டுள்ளது.

பெப்சி என்பதற்கு பதிலாக ”கெத்து” என தமிழில் எழுதி விற்பனை செய்து வருகின்றது.

தமிழில் எழுதியிருந்தால் தமிழக பானம் என நினைத்து தமிழக மக்கள் வாங்கி குடித்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் பெப்சி இந்த மட்டமான யுக்தியை கையாண்டுள்ளது என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

தமிழக மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது, தமிழக மக்களை முட்டாளாக்க நினைக்கும் பெப்சிக்கு முன்பை விட கடுமான எதிர்ப்பை தமிழக மக்கள் காண்பிப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

கெத்து என்பதோடு மட்டுமல்லாம் பின் வரும் பெயர்களிலும் பெப்சி விற்கப்படுகின்றது.

#தூள் #செம்ம #டக்கரு #ஜொல்லு

இந்த பெயர்கள் இடம் பெற்றுள்ள பாட்டில்களை பொதுமக்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுமக்களின் குடிநீரை லஞ்சக்கணக்கான லிட்டர் உரிஞ்சி இன்றைக்கு தமிழகத்தையே வரண்ட பூமியாக மாற்றியது இவர்களை போன்ற நிறுவனங்கள் தான் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

KFC, Pizza Hut,PVR cinemas உள்ளிட்டவைகளுடன் இணைந்து இந்த தமிழ் பெயரில் விற்பனை செயும் பெப்சியை பெப்சி நிறுவனம் promote செய்வது வருவது குறிப்பிடதக்கது. Super market உள்ளிட்ட இடங்களிலும் இது விற்பனை செய்யப்படுகின்றது.

27 total views, 1 views today

Please follow and like us:

Related Post