Please follow and like us:

கர்நாடாகை சேர்ந்த Murudeshwar என்ற பகுதியில் வசிக்கும் கிருஷ்ணா வயது 30, இவர் ஆட்டோ ஓட்டுனர். ”D Balse Boys” என்ற வட்சப் குரூப் உருவாக்கி அதற்கு அட்மினாக இருந்து வந்துள்ளார்.

அந்த குரூபில் உள்ள Ganesh Naik என்பவர் மோடியின் புகைப்படத்தை மார்ப் செய்து விமர்சித்து போஸ்ட் போட்டுள்ளார். இதை எதிர்த்து அதே குரூபில் உள்ள பிஜேபி கட்சியை சேர்ந்த ஆனந்த் என்பவர் போலிசில் புகார் அளித்துள்ளார்.

உடனே கர்நாடக போலிசார் அந்த குரூப் அட்மினையும் , அந்த போஸ்ட் ஐ பதிவு செய்தவரையும் கைது செய்துள்ளனர், மேலும் அந்த போஸ்ட் ஐ ஊக்கப்டுத்தும் வண்ணம் கருத்து பதிவு செய்த பாலாகிருஷ்ணா என்பவரையும் தேடி வருகின்றனர்.

”குற்றவாளிகளின் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என கர்நாடக SP Vinayak Patil தெரிவித்துள்ளார்.

அந்த போட்டோவை நீக்கும் படி கூறியும் குருப் அட்மின் அதை நீக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இது போன்ற வாட்சப் போஸ்டிற்கு குருப் அட்மின் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட குரூப் அட்மின் கிருஷ்ணா, மற்றும் கணேஷ் , Bhatkal கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, பின்னர் பெயில் மூலம் வெளியே வந்துள்ளனர்.

எனினும் குரூப் அட்மினை மீண்டும் போலிசார் கைது செய்யவுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளது காரணம் சர்ச்சைக்குரிய போஸ்ட் போட்ட உறுப்பினரை இவர் மீண்டும் தனது குரூபில் சேர்த்துள்ளதாக Bhatkal இன்ஸ்பெக்டர் Suresh Nayak கூறியுள்ளார்.

29 total views, 1 views today

Please follow and like us:

Related Post