Please follow and like us:

மேட்டுப்பாளையத்தில் உள்ள சுகாதார மையத்தற்கு வந்த பெண் , தான் திருப்பூர் மாவட்டத்திற்கு புதிதாக வந்துள்ள கலெக்டர் எனக் கூறி இங்கு ஆய்வு நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அவர் கூறியதை அப்படியே நம்பி சுகாதார மைய ஊழியர்களும் ஆவணங்களை காட்டியுள்ளனர், அதில் இவர் கையெழுத்து போட்டு விட்டு கிளம்பியுள்ளார்.

மறு நாளும் அங்கு வந்துள்ளார், அவர் ஸ்கூட்டரில் வந்ததை இந்த முறை பார்த்த ஊழியர்கள், கலெக்டர் ஸ்கூட்டரில் வரமாட்டாரே என இந்த பெண் மீது சந்தேகப்பட்டு போலிசிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு வந்த போலிசாரிடம், அரசு உத்தரவு இல்லாமல் நான் அரசு வாகனத்தில் ஏற மாட்டேன் என அடம்பிடித்துள்ளார்.

இருப்பினும் போலிசார் அவரை அழைத்து சென்று விசாரித்ததில் அவர் கணவரை பிரிந்து வாழ்பவர் என்பதும் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளர் என்பதும் தெரிய வந்தது.

மேலும் அவருக்கு லேசாக மன நிலை பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து இனிமேல் இது போன்று செய்யக் கூடாது என போலிசார் எச்சரித்து அவரை அனுப்பி வைத்தனர்.

23 total views, 1 views today

Please follow and like us:

Related Post