Please follow and like us:

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வர மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை இன்று சிறைபிடித்துள்ளது, மேலும் அவர்களின் படகையும் பறித்துள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளது.

மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது படகு பழுதாகியுள்ளது , பழுதை சரி செய்து கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து இழுத்து சென்றுள்ளது. மேலும் அவர்களின் படகையும் பறிமுதல் செய்துள்ளது.

தமிழக மீனவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கும் நாளான இன்று இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”நீ என்னய ஒன்னும் பன்ன முடியாது, நீ பேச்சு வார்த்தை நடத்தும் அன்னைக் கூட பிடிப்போம் உன்னால என்ன பன்ன முடியும் என்ற இலங்கை அரசின் திமிர் போக்கையே இது காண்பிக்கின்றது என மீனவர்கள் குற்றசாட்டு வைத்துள்ளனர்.

29 total views, 1 views today

Please follow and like us:

Related Post