Please follow and like us:

திருமணம் ஆன ஒரே மாதத்தில் இளம் பெண் மர்ம சாவு, போலிஸ் மீது போலிசில் புகார்!

வேலூர் வக்னம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் சென்னையில் ஆயுதப்படை போலீஸாக பணியாற்றுகின்றார்.

இவருக்கு உறவினரின் மகள் செந்தமிழ்செல்வியை பெண் பேசியுள்ளனர்.

பின்னர் செந்தமிழ்செல்வியின் பெற்றோருக்கு பிரபாகரை பிடிக்கவில்லை இதனால் கல்யாண பேச்சு வார்த்தை நின்றது.

இதற்கிடையில் செந்தமிழ்செல்வியை அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பிரபாகரன் பேசியுள்ளார். இதில் நட்பாகி கடையில் காதலாகியுள்ளது.

வீட்டிற்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணம் நடந்தது தெரியாமல் செந்தமிழ்செல்வியின் குடும்பத்தார் தங்களது மகள் வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டுள்ளார் என நினைத்துக் கொண்டிருந்துள்ளனர்.

பிரபாகரன் ஒரு மாதம் கழித்து , செந்தமிழ்செல்வி குடும்பத்தாருக்கு போன் செய்து உங்கள் மகள் இறந்து விட்டார் ப்ரேதம் திருப்பத்தூர் மருத்துவமனையில் இருக்கின்றது வந்து எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருப்பத்தூர் விரைந்த சென்று தனது மகளை சடலமாக பார்த்து கதறி அழுதுள்ளனர்.

செந்தமிழ்செல்வி முகத்தில் காயங்கள் இருக்கவே பெற்றோர் போலிசில் புகார் அளித்துள்ளனர். மர்ம சாவு என வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரனை நடத்தி வருகின்றது.

பிரபாகரன் ஏற்கனவே இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், இது செந்தமிழ்செல்விக்கு தெரியாது எனவும், தெரிந்தவுடன் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு அதில் செந்தமிழ்செல்வி இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

இந்த கோணத்தில் தற்போது போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

29 total views, 1 views today

Please follow and like us:

Related Post