Please follow and like us:

வாகன சோதனையில் இருந்த திருப்பூர் வீரபாண்டி போலிசார் பைக்கை துரத்தியதில் பணியன் கம்பேனியில் டைலராக வேலை பார்த்து வந்த சுரேஷை் விளம்பர போர்டில் மோதி சாக்கடையில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானர்.

உறவினர்கள் விபத்து நடந்த இடத்திலேயே சடலத்தை வைத்துக் கொண்டு போராட்டம் நடத்தினர். பொதுமக்களிடையே இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.

பின்னர் போலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

இதை தொடர்ந்து சுரேசை துரத்திய போலிஸ் ஏட்டு செபாஸ்டின்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

செபாஸ்டின்ராஜ் ஐ சஸ்பெண்ட் செய்து திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் மாத்தூர் உத்தரவிட்டுள்ளார்.

சுரேசை துரத்திய சஸ்பெண்ட் செய்யப்பட்ட செபாஸ்டின்ராஜ்

மேலும் ஏட்டு செபாஸ்டின்ராஜ் மீதும் , போலிஸ் நண்பர் குழு (ஃபிரண்ட் ஆஃப் போலிஸ்) வை சேர்ந்த ஒருவர் மீதும் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுரேஷ் விபத்தில் இறந்து கிடக்கும் காட்சிகள்

[embedded content]

28 total views, 1 views today

Please follow and like us:

Related Post